
எதிர்க்கட்சியின் பல கட்சிகள் நாளை மைத்திரிபால சிறிசேனவுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட உள்ளன.
இந்த நிகழ்வில் சரத் பொன்சேகாவும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜாதிக ஹெல உறுமயவின் அதுரலிய ரதன தேரர், உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து ஐனநாயகக் கட்சி இதுவரையில் உத்தியொகபூர்வ தீர்மானம் எதனையும்
அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் சரத் பொன்சேகா முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக