திங்கள், 1 டிசம்பர், 2014

மைத்திரிபால ஜனாதிபதியானால் வடக்கு இராணுவ முகாம்கள் அகற்றப்படும் ஞானசார தேரர்..!!

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு எதிராக செயற்படும் எதிரி சக்திகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் நிலவி வரும் அச்சுறுத்தல்கள் குறித்து அம்பலப்படுத்தப்படும்.

நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் அச்சுறுத்தல்கள் குறித்து மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


பொது வேட்பாளர் ஐரோப்பிய நாடுகளிடம் பணம் திரட்டி வருகின்றார்.

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தேர்தலில் மைத்திரிபால வெற்றியீட்டினால் முகாம்கள் அகற்றப்படலாம், இந்த சூழ்ச்சித் திட்டங்கள் குறித்து எதிர்காலத்தில் மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்த போதிலும் ஆளும் கட்சியின் தேர்தல் பிரச்சார மேடைகளில் ஏறி பிரச்சாரம் செய்யப் போவதில்லை என கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக