திங்கள், 1 டிசம்பர், 2014

பராக் ஒபாமா ஜனவரி 9ம் திகதி இலங்கை ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்சவை பார்க்கலாம் அமைச்சர் டலஸ்..!!

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதிக்கு கூறாமலேயே கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்
எனினும், ஜனாதிபதி மஹிந்தவுக்கு கூறிய பின்னரே,  சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.

மாத்தறை அகுரஸ்ஸையில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

பொன்சேகாவை பொறுத்தவரை அவர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னர், மரியாதையின் அடிப்படையில் அலரிமாளிகைக்கு சென்று ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதைக் கூறினார்.


எனினும் பொதுவேட்பாளர் மைத்திரிபால தங்களுடன் ஒன்றாக இருந்த தேனீர் அருந்திவிட்டு சொல்லாமலேயே அரசாங்கத்தில் இருந்து விலகிவிட்டார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி 9ம் திகதியன்று சிஎன்என் தொலைக்காட்சி செய்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இலங்கை மக்கள் மீண்டும் தெரிவுசெய்துள்ளனர் என்று விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா காணக்கூடியதாக இருக்கும் என்று அழகப்பெரும தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக