சனி, 13 நவம்பர், 2010

ஆசிய விளையாட்டு விழா சீனாவில் ஆரம்பம்..!

ஆசிய விளையாட்டு விழா நேற்று மிகவும் கோலாகலமாக சீனாவில் ஆரம்பமாகியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆசிய விளையாட்டு போட்டியின் துவக்கவிழா மிதக்கும் படகுகளின்மீது மிகவும் வித்தியாசமான முறையில் நடக்கவுள்ளது. சீனாவிலுள்ள குவாங்சு நகரில் 16ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடக்கவுள்ளது. நேற்று துவங்கும் போட்டிகள் வரும் 27ம்திகதி நிறைவுபெறுகிறது. நேற்று துவக்க விழாவூக்கு சீனா மிகப் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது. வழக்கமாக மைதானங்களில் தான் துவக்கவிழா நடக்கும். இம்முறை சற்று வித்தியாசமாக குவாங்சுவில் உள்ள பேர்ல் நதியில் மிதக்கும் படகுகளின்மீது துவக்கவிழா கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. சுமார் 2400 கி.மீ. நீளம் கொண்ட பேர்ல் நதியில் அலங்கரிக்கப்பட்ட 46 படகுகள் மிதந்து செல்லும். இவற்றில் 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் பயணிக்க உள்ளனர். 6ஆயிரம் கலைஞர்கள் சேர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்திக் காட்ட இருக்கின்றனர். கண்கவர் "லேசர் ஷோ' மற்றும் வாணவேடிக்கை ரசிகர்களை கவர்ந்திழுக்க காத்திருக்கிறது. இதற்காக நகர் முழுவதும் விளக்குகள் அணைக்கப்பட உள்ளன. சீன பாரம்பரியத்தை விளக்கும் நிகழ்ச்சிகள் ஒளி வெள்ளத்தில் தண்ணீரின்மீது பிரதிபலிக்க உள்ளன. சுமார் 45நிமிட பயணத்துக்கு பின் படகுகள் அனைத்தும் 6 பாலங்களை கடந்து ஹெய்க்சின்ஹா சதுக்கத்தை சென்றடையும். ஆசிய விளையாட்டு ஜோதி ஏற்றும் நிகழ்ச்சியும் வித்தியாசமாக நடக்க உள்ளது. இதன் விபரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக