கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 14ம் திகதியில் இருந்து மேலதிக தபால் ரயில் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி மேலதிக தபால் ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் என்றும் மேலதிக ரயில் பெட்டிகளும் பொருத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதலாவது மெயில் ரயில் கோட்டையில் இருந்து இரவு 7.45 மணிக்கு ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த விடயம் குறித்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது,
குறித்த விடயம் குறித்து இதுவரை தங்களுக்கு உத்தியோக பூர்வமாக அறியத்தரவில்லை என்றும் ஊடகங்கள் மூலமாகவே தாமும் அறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பயணம் செய்பவர்கள் அதிகமாக இருப்பதனால் மேலதிக ரயில் சேவையின் தேவை உள்ளது என்றும் நேற்றும் இன்றும் விடுமுறை நாள் என்பதால் குறித்த சேவை தொடர்பில் நாளையோ அல்லது அண்மித்த நாட்களிலோ திணைக்களத்தினால் தெரிவிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தற்போது யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையில் 4 சேவைகள் மட்டும் இடம்பெற்று வருவதுடன் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் விசேட சேவை ஒன்றும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக