செவ்வாய், 16 நவம்பர், 2010
பேருவளை நகரசபை பகுதியில் 10 கிராமசேவை அதிகாரி பிரிவுகளில் 10 வீதிகளை புனரமைக்க நடவடிக்கை..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தை முன்னிட்டு பேருவளை நகர சபை பகுதியில் 10 கிராமசேவை அதிகாரி பிரிவுகளில் 10 வீதிகளை புனரமைக்க பேருவளை நகர சபை எதிர்க்கட்சித் தலைவர் இர்பான் முர்ஸி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். எதிர்வரும் 20ம்திகதி காலை 10.00 மணிக்கு வீதிப் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்படும். கடற்றொழில், நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, மாகாண சபை உறுப்பினர் எம்.எம்.எம். அம்ஜாத், நகரசபை உறுப்பினர்களான முனவ்வர் ரபாய்தீன், எம்.உஸ்மான் ஹாஜியார் ஆகியோர் ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றவுள்ளனர். ஒரு வீதிக்கு 6,90,000 ரூபா வீதம் செலவிடப்படும். பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இதற்கான நிதியை ஜாதிக சவிய, கமநெகும திட்டத்தின் கீழ் ஒதுக்கியுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் இர்பான் முர்சி தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக