செவ்வாய், 4 நவம்பர், 2014

ஜனாதிபதி மகிந்தவுக்கு கடிதம் எழுதிய சுப்பிரமணியன் சுவாமி..!!

இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி எதிர்வரும் 25 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க உள்ளார்.

முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் ஞாபகார்த்த பேருரையில் கலந்து கொள்ளும் நோக்கில் சுவாமி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இலங்கையில் அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு எதிரான வழக்கை இந்தியாவுக்கு மாற்றி மீண்டும் விசாரணைக்கு எடுப்பது குறித்து பேசுவதும் சுப்பிரமணியன் சுவாமியின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக