ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலத்தில் நான்கு ஆண்டுகள் கழிந்த பின்னர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்தும் உரிமை அவருக்கு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, தேர்தலை அறிவித்த பின்னர் தேர்தலை நடத்தும் முழுமையான பொறுப்பு தேர்தல் ஆணையாளருக்கு உரியதாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் சேவையும் அரச சேவையும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ள நிலைமையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பக்கசார்பற்றதாகவும் சுதந்திரமானதாகவும் நடைபெறும் என எண்ண முடியாது எனவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது மாத்திரமல்ல அவசரமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது என ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ,அமைப்புகள் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக