வியாழன், 6 நவம்பர், 2014

ஐ.நாவினால் தொடர்ந்தும் முறைப்பாடுகள் பதிவு அரசாங்கம் அதிருப்தி..!!!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தால் இலங்கை தொடர்பான முறைப்பாடுகளை தொடர்ந்தும் பெற்றுக் கொள்கின்றமை குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 30ம் திகதியுடன் ஐ.நா விசாரணைகளுக்காக முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், குறித்த காலத்திற்குப் பின்னர் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என மனித உரிமைகள் ஆணையகம் அண்மையில் அறிவித்திருந்தது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் பீரிஸ்,

இது ஒரு தரப்பினரின் நலன் கருதி எடுக்கப்பட்ட தீர்மானம்.

தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் பக்கச்சார்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.


ஐ.நா மனித உரிமைகள் சபையின் இந்த நடவடிக்கையினால், நீதி, நியாயம் மீறப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக