யாழ். வட்டுக்கோட்டை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், மற்றும் புளொட் தலைவரும், வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆகியோர் 30.10.2014 அன்று வட்டுக்கோட்டை கொத்தன்துறை மயான அபிவிருத்தி தொடர்பில் நேரடியாக சென்று ஆராய்ந்துள்ளனர்.
மேற்படி மயானமானது வட்டுக்கோட்டை, அராலி, சங்கரத்தை, பொண்ணாலை, மூளாய் மற்றும் சித்தங்கேணி பகுதி மக்களால் பயன்படுத்தப்படுவது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இதே வேளை இவ் மயானம் மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் இருந்தமையும் சுட்டிக்காட்டக்கூடிய ஒன்றாகும்.
இவ் நிலைமைககள் தொடர்பில் வட்டுக்கோட்டை கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறியத் தந்ததனைத் தொடர்ந்து
கௌரவ வடமாகாண சபை முதலமைச்சர் அவர்கள் தமது ஒதுக்கீட்டில் இருந்து ரூபா 7 லட்சமும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்கள் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா. ஓரு லட்சமும்
வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், அவர்களது மாகாணசபை நிதியிலிருந்து ரூபா 50,000மும் ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் வெகு விரைவில் இதன் புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிக்கூடிய ஒன்றாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக