செவ்வாய், 4 நவம்பர், 2014

வட்டுக்கேட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு.!!

யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் ஊடாக புலம்பெயர் உறவுகளின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்விக்கு கைகொடுப்போம் நிகழ்சித்திட்டத்தின் கீழ் ஜேர்மனி வாழ் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களின் வழிகாட்டலில் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு கடந்த 30.10.2014 வியாழக்கிழமை அன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம்பெற்றது.

இவ் நிகழ்விற்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டுப் பணிப்பாளர் திரு.பி.எல்.மோகணக்குமார் ஆசிரியர் தலைமை வகித்திருந்தார். இவ் நிகழ்வில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக