செவ்வாய், 4 நவம்பர், 2014

வடக்கு மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் பெரியபுலோ மக்களுடன் சந்திப்பு.!!

யாழ். சுழிபுரம் பெரியபுலோ பகுதியில் கடந்த 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணியளவில் பிரதேச பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
திரு.குமார்(சின்னக்குமார்) அவர்களின் தலைமையில் பெரியபுலோ அண்ணா சனசமூக முன்றலில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலின்போது புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.



அத்துடன் அப்பகுதியில் தற்போது நடைபெற்றுவரும் வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக