ஞாயிறு, 30 நவம்பர், 2014

அஸ்வர் எம்.பிக்கு ஆளுநர் பதவி..!!!

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஏ.எச்.எம் அஸ்வருக்கு ஆளுநர் பதவி வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேல் மாகாண ஆளுநராக அவர், நியமிக்கப்படலாம் என்று உட்தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன..

இதேவேளை, கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் ஒரு உண்மையான உறுப்பினர் தலைமைக்கு எவ்வளவு தூரம் விசுவாசமாகவும், நம்பிக்கையாகவும் இருக்க வேண்டுமென்பதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் ஒரு உதாரண புருஷராக விளங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் விவகார இணைப்பாளர் கந்தசாமி கருணாகரன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.


அத்துடன் அஸ்வர் அவர்கள் எமது கட்சித் தலைவரான ஜனாதிபதியுடன் தனக்கிருந்த உண்மையான தூய நட்புக்கும் உறுதுணையாக இருந்த அரசியலில் நட்பு என்பதற்கும் ஒரு இலக்கணமாக விளங்கியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

காரணம் அதுவுமின்றி பதவி ஆசைக்காக தான் முக்கிய பதவி வகித்த கட்சியைக் காட்டிக் கொடுத்தது மட்டுமல்லாது தனது தலைவரை வசை பாடிவரும் மைத்திரிபால சிறிசேனவுடன் ஒப்பிடுகையில் அஸ்வர் அவர்கள் உயரிய இடத்தில் இருப்பதாகவும் கருணாகரன் தெரிவித்தார்.

கட்சியின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் கட்சியினதும் தலைமையினதும் வேண்டுகோளைத் தட்டிக் கழிக்காது செயற்படுபவரே உண்மையான கட்சி விசுவாசி, உண்மையான தொண்டன் எனவும் கருணாகரன் பாராட்டியுள்ளார்.

உண்மையில் அஸ்வர் அவர்கள் சுதந்திரக் கட்சியில் உயரிய இடத்தைப் பிடித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக