சனி, 8 நவம்பர், 2014

அமெரிக்காவில் நவீன ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது…!!

அமெரிக்காவின் வடக்கே மெக்சிகோ வளைகுடா பகுதியில் நேற்று காலை பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்க போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தையும் விமானியையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

அமெரிக்காவின் வடக்கே புளோரிடா,அலபாமா, மிசிசிபி, லூசியானா மற்றும் டெக்சாஸ் மாநிலங்கள் இணைந்த பகுதி மெக்சிகோ வளைகுடா என்று அழைக்கப்படுகிறது.மெக்சிகோ வளைகுடா பகுதியில் உள்ள டைன்டால் விமானதளத்தில் இருந்து நேற்று காலை எப்&16 என்ற நவீன ரக போர்விமானம் பயிற்சிக்காக கிளம்பி சென்றது.

அந்த விமானம் கிளம்பி சென்ற ஒரு சில மணி நேரங்களில் புளோரிடாவின் பான்ஹேன்டில் விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து, அந்த விமானத்தை தேடும் பணியில் அமெரிக்க விமானப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுவரை அந்த விமானத்தின் பாகங்கள் நிலப்பகுதியில் கண்டுபிடிக்கப்படவில்லை.அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என்று அமெரிக்க கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

இதத் தொடர்ந்து, அமெரிக்க கடற்பகுதியில் கடலோர காவல்படையினர் படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த விமானத்துடன் விமானியையும் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் நாங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம் என்று அமெரிக்க விமானப் படையின் துணை கமாண்டர் மார்க் ஓ லாப்ளின் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக