திங்கள், 4 ஜனவரி, 2010
கிரிபத்கொடையில் இரு அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்..!!
கம்பஹா மாவட்டம் கிரிபத்கொடை காளுசந்தியில் வைத்து இரு அரசியல் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவமானது இன்றுகாலை 9.30அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தில் ஜே.வி.பியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்திருந்ததாகவும், இதனையடுத்து பொலீசார் அவ்விடத்திற்கு சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் ஆளும் கட்சியின் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விரு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியுள்ளது. இதன்போது கற்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிலருக்கு காயமேற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பொலீசார் தலையிட்டு குறித்த குழுக்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக