புதன், 5 நவம்பர், 2014

பட்ஜெட் பற்றாக்குறை ரூ.35,600 கோடியால் அதிகரிப்பு…!!

நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 24ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீது இரண்டு திருத்தங்களை பிரதமர் தி.மு ஜயரத்ன, நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார்.

அதன்பிரகாரம் 2015ஆம் ஆண்டுகான மொத்தசெலவை 35,600 கோடி ரூபாவினால் அதிகரிப்பதற்கும் கடன்பெறும் எல்லையை 44,000 கோடி ரூபாவினால் அதிகரிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வரவு-செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பற்றாக்குறை 35,600 கோடி ரூபாவினால் அதிகரிப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்திட்டத்தில் மொத்தசெலவீனமாக ஒரு இலட்சத்து 81 ஆயிரத்து 229 கோடி ரூபாவாக குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று சமர்ப்பிக்கப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் மொத்த செலவீனம் 2 இலட்சத்து 16 ஆயிரத்து 829 கோடி ரூபாவாகும்.


24ஆம் திகதி சமர்பிக்கப்பட்ட வரவு-செலவுத்திட்டத்தின் பிரகாரம் கடன்பெறும் எல்லையானது ஒரு இலட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாவாக இருந்தது. திருத்தத்தின் பிரகாரம் கடன் எல்லை ஒரு இலட்சத்து 78 ஆயிரம் ரூபாவாகும்.

இவற்றின் அடிப்படையில் அரசாங்கத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான செலவு 35,600 கோடி ரூபாவினாலும் கடன்பெறும் எல்லை 44,000 கோடி ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக