சனி, 29 நவம்பர், 2014

புதுக்குடியிருப்பில் புதைகுழி தோண்டும் பணி 2ம் திகதி..!!!

பொலிஸ் பரிசோதகர் துரைரட்ணம் ஜெயரட்ணம் அடங்கலான 80 பேர் புலிகளால் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் எதிர்வரும் டிசம்பர் 2ம் திகதி விசாரணை முன்னெடுக்கப்படவிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம், சட்ட மருத்துவ நிறுவனம், இலங்கை நில அளவை திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் என்பவற்றின் பங்களிப்புடன் இது தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பயங்கரவாத புலனாய்வு பிரிவின் மூலம் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலின் பிரகாரம் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் புலிகளினால் சட்டவிரோதமாக சிறைக்கூடமொன்று நடத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.



இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம், இராணுவ கப்டன் லக்கி அடங்கலாக 80 தமிழ் இளைஞர்கள் புலிகள் இயக்கத்தினால் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக கிடைத்த தகவல் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தக் கொலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நீதவான் விசாரணையின் பின் கொலைகள் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு வள்ளிபுரம் பிரதேசத்தில் எதிர்வரும் 2ம் திகதி அகழ்வுகள் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணி மூன்று தினங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக