
தெதிகம தேர்தல் தொகுதியில் நடைபெற்ற சுதந்திரக் கட்சி இளைஞர் மாநாட்டில் அண்மையில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை மீளவும் பிளவுபடுத்த இரகசியமாகவோ அல்லது பரகசியமாகவோ செய்யப்படும் முயற்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது.
அந்தப் பொறுப்பு இளைஞர்களைச் சாரும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைகளில் இரத்தம் தோய்ந்த கட்சி அல்ல என்பதனை பொறுப்புணர்ச்சியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் இரத்தம், சதை, உயிர்த் தியாகம் செய்த கட்சியாகும்.
சமூக நீதிக்காக வடக்கிலும் தெற்கிலும் காலத்திற்கு காலம் இளைஞர் கிளர்ச்சிகள் ஏற்பட்டன.
இளைஞர்களின் கிளர்ச்சிக்கு தலைமைத்தும் வழங்கிய சில கடும்போக்குவாத தலைமைகள் தங்களது குறுகிய அரசியல் நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்வதற்கு, இளைஞர்களை பயன்படுத்திக் கொண்டனர்.
இதனால் இளைஞர்களுக்கும் நாட்டுக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டன.
வறுமை தொழில் வாய்ப்பு இன்மை உள்ளிட்ட சமூக அநீதிகளுக்காக இளைஞர்கள் கிளர்ந்து எழுந்தனர்.
அநீதிக்கு எதிராகவும் அணி திரண்டனர்.
வடக்கில் இவ்வாறு கிளர்ந்து எழுந்த இளைஞர்களுக்கு பிரிவினைவாத, இனவாத பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமை தாங்கினர்.
தெற்கிலும் இவ்வாறான ஓர் அணி திரள்வு இடம்பெற்றது.
வடக்கிலும் தெற்கிலும் கடும்போக்குவாத அரசியல் அமைப்புக்கள் இளைஞர்களை தங்களது அரசியல் நோக்கிற்காக பயன்படுத்தியமையினால் பாரியளவு இளைஞர்களை நாடு இழந்து விட்டது.
இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டை கட்டியெழுப்பியுள்ளார்.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கைத்தொழிற்சாலைகளை அழிப்பது எமது நோக்கமல்ல.
எங்களது வயதுடைய இளைய படைவீரர்கள் உயிர் உடல் தியாகம் செய்து இரண்டாக பிளவுபட்டிருந்த நாட்டை ஐக்கியப்படுத்திக் கொடுத்தனர்.
அதனை பாதுகாக்க வேண்டியது எங்களது கடமையாகும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszARWKWer0.html#sthash.KOZhFzo1.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக