
வவுனியா அண்ணாநகர் பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 29 ஆம் திகதி அல்லது அதற்கு கிட்டிய தினத்தில் சந்தேக நபர் இந்த கொலையுண்ட நபரை தாக்கியுள்ளார்.
தாக்குதலில் படுகாயத்திற்கு உள்ளான நபர் சில மாதங்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி கே. பார்த்திபன் தலையில் பட்ட பலத்த அடியின் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
இதனடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக