திங்கள், 27 அக்டோபர், 2014

மகிந்தவிற்கு முடியாவிட்டால் கோத்தபாய ராஜபக்ஷவினர் முடிவு..!!!!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டரீதியான தடைகள் ஏற்பட்டால், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என ராஜபக்ஷவினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சட்டத்தின் அடிப்படையில் போட்டியிட முடியாது எனவும் அப்படி போட்டியிட்டால், அது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல் எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கடும் வாதங்களை முன்வைத்து வருகிறார்.

அத்துடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளது.

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல போவதாக ஜே.வி.பி கூறியுள்ளது.

இப்படியான நிலைமையில், மகிந்த ராஜபக்ஷவுக்கு சட்ட ரீதியான தடைகள் ஏற்பட்டால், ராஜபக்ஷவினரில் அடுத்துள்ள பிரபலமான நபரான கோத்தபாய ராஜபக்ஷவை தேர்தலில் நிறுத்துவது என ராஜபக்ஷவினரிடையே இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.


கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நாடு முழுவதிலும் உள்ள பௌத்த அமைப்புகள் பலவற்றின் ஆசியும் அனுசரணையும் இருப்பதால், ராஜபக்ஷவினர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ஷ இதனை விரும்பாத போதிலும் குடும்பத்தினரின் கோரிக்கையை நிராகரிக்க மாட்டார் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக