
இலங்கையில் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் உள்ளிட்ட விடயங்களை செயல்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து அவர், அமைப்பின் நடப்பு தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு விளக்க உள்ளார்.
எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தங்கியிருக்கும் கமலேஷ் சர்மா, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ உட்பட அரசாங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்து பேசவுள்ளார்.
இதனை தவிர இலங்கையின் தேசிய அபிவிருத்தி, போருக்கு பிந்திய திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயவுள்ள அவர், இலங்கை மனித உரிமை ஆணையாளர், தேர்தல் ஆணையாளர் மற்றும் சிவில் அமைப்புகளில் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் செயலாளர், வடக்கு மாகாணத்திற்கு முதல் முறையாக விஜயம் செய்ய உள்ளதுடன் யாழ்ப்பாணம் செல்லும் அவர் மோதலுக்கு பின்னரான அபிவிருத்தி, தற்போதைய முன்னுரிமைகள், எதிர்நோக்கப்படும் சவால்கள் குறித்து ஆராயவுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக