
குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய, பிங்கிரிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மூன்று தடவைகளுக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் என்பது பொதுமக்களின் பிரதிநிதிகள். எனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு இப்போதே தோல்விப் பயம் வந்துவிட்டது. அதன் காரணமாகத் தான் இலங்கையில் உள்ள வாக்காளர்களை விட்டுவிட்டு புலம் பெயர் தமிழர்களைத் தேடி ரணில் செல்கின்றார். அவர்களின் ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கின்றார்.
ஆனால் ரணில் வெற்றி பெற்றால் சிங்கள, முஸ்லிம் மக்கள் இங்கு வாழ முடியாது. இந்நாடு ஈழம் நாடாகி விடும். சிங்கள, முஸ்லிம் மக்கள் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்வது தவிர வேறு வழியிருக்காது.
எனவே அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும். அவரது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக