வெள்ளி, 24 அக்டோபர், 2014

சப்ரகமுவ பல்கலைக்கழகம் திங்கட்கிழமை திறக்கப்படுகிறது...!!!!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்க அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக திங்கட் கிழமை கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான கற்பித்தல்கள் அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன. முதலாம் ஆண்டு மாணவர்களை 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதிய விடுதிகளுக்கு வருமாறு நிர்வாகம் அறிவித்துள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோரை இன்று பல்கலைக்கழகத்திற்கு அழைத்திருந்த நிர்வாகம், அவர்களுக்கு விளக்கங்களை வழங்கியதுடன் புதிய விடுதியை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கியது.


சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அருகில் சத்தியாகிரகப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக