ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரைப் பயன்படுத்தி ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களைப் பயன்படுத்தி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பில் 273 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளார் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்துடன் தமது புகைப்படத்தை இணைத்துக் கொள்ளல், ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் செல்லிடப்பேசியில் உரையாடுவது போன்றும் பாசாங்கு செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள், குற்றச் செயல்களை தடுக்க விசேடப் பொலிஸ் பிரிவொன்று பௌத்தாலோக்க மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தொழில்களைப் பெற்றுத் தருவதாகக் கோரி பணம் பெற்றுக் கொள்ளல், அரசாங்க ஒப்பந்தங்கள் பெற்றுத் தருவதாக ஏமாற்றுதல், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதியளித்து பணம் பெற்றுக்கொள்ளல், பதவி உயர்வு வழங்குவதாக உறுதியளித்து பணம் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக