வெள்ளி, 5 செப்டம்பர், 2014

உயர்தர பரீட்சையின் புள்ளியிடல் திட்டம் முன்னரே வௌியிடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!!


கல்விப் பொதுத்தாரதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களுக்கு புள்ளி வழங்கும் விதம் உள்ளக்கப்பட்ட ஆவணமொன்று, மாத்தறை பிரதேச தொலைத் தொடர்பாடல் நிலையமொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்னும் பூர்த்தியடையாத நிலையிலேயே
புள்ளிவழங்கும் விதம் குறித்த ஆவணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு அருகிலிருந்த நிலையமொன்றில் இருந்தே குறிப்பிட்ட ஆவணம் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகைய ஆவணங்களை வைத்திருத்தல் சட்டவிரோதமானது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார குறிப்பிடுகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக