சனி, 6 செப்டம்பர், 2014

தமிழரசுக்கட்சி தலைவராக மாவையும் செயலாளர் நாயகமாக துரைராஜசிங்கமும் தெரிவு! (படங்கள்)

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேலும் செயற்குழு தலைவராக இரா.சம்பந்தனும், செயலாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தெரிவாகியுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி பொதுச்சபை கூட்டம் இன்று காலை
வவுனியாவில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக