வவுனியா தேக்கவத்தை பகுதியில் பொலிசாருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.
தேக்கவத்தையில் அமைந்துள்ள பொதுக்கிணறை மக்களின் பாவனைக்கு விடாமல் குறிப்பிட்ட சில வாரங்களாக பொலிசார் தடைவிதித்து தங்களின் பாவனைக்கு மாத்திரம் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
வவுனியாவில் ஏற்பட்ட வரட்சி காரணமாக மக்கள் பெரும்
அசௌகரியத்திற்கு வரும் நிலையில் பொதுக்கிணறை பயன்படுத்துவதற்கு தடைவிதித்தமையை கண்டித்து இன்று மாலை 6.30 மணியளவில் இலங்கை வான்படை வவுனியா தலைமைக்காரியாலயம் அமைந்துள்ள இடத்திற்கு முன்னாள் கண்டி வீதியில் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
பொதுமக்களில் ஒருவர் வாகனங்களை மறித்து வீதியில் படுத்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
'பூர்வீகம் செய்திகளுக்காக விசேட செய்தியாளர்'

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக