ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

நவிப்பிள்ளையின் ஓய்வு : இலங்கை அரசார்பற்ற நிறுவனங்கள் கவலையுடன் கடிதம்!!

நவநீதம்பிள்ளை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறுவதற்கு வருத்தம் தெரிவித்து, இலங்கையைச் சேர்ந்த பல அரசு சார்பற்ற நிறுவனங்கள் அவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையளர் பொறுப்பில் இருந்து நவநீதம்பிள்ளை இன்று ஞாயிற்றுக்கிழமை ஓய்வு
பெறுகிறார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளராகப் நவநீதம்பிள்ளை கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வந்த காலத்தில், இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிடக் காரணமாகவும் இருந்தார்.

இதையடுத்து, அவர் சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் இலங்கைக்கு எதிரான போர் குற்ற விசாரணையை நடத்திவரும் குழு சிறப்பான முறையில் செயல்படும் எனவும் நவநீதம்பிள்ளை நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நவநீதம்பிள்ளை ஓய்வு பெறுவதையடுத்து, அவரின் வெற்றிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோர்டன் நாட்டின் இளவரசர் சையத் அல் ஹூசைன் நாளை திங்கட்கிழமை முதல் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக