ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

கிளிநொச்சி கந்தன் குளம் ஒரு குடும்பத்தைசேர்ந்த இருவர் உட்பட மூன்று மாணவிகளின் உயிரை பறித்தது!! (படங்கள் இணைப்பு)


கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவிகளான ஒரே குடும்பத்தை சேர்ந்த பாலசரவணபவன் நவதாரணி பாலசரவணபவன் தாட்சாயிணி ஆகியவர்களும் இரத்தினராசா நிசாந்தினி என்பவரும் பரிதாபகரமாக நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

இவர்கள் மூவரும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவர்களென தெரிவிக்கப்படுகின்றது.

கடும் வரட்சி காரணமாக வற்றி சேறாக காணப்படும் குளங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஆபத்தான நிலைகளில் குளித்துவருகின்றார்கள்.

கிளிநொச்சியில் ஏற்பட்டிருக்கின்ற
மிகப்பெரும் வரட்சியும் .

குளங்களும் வற்றி ஆபத்தான நிலையில் காணப்படும் சந்தர்ப்பத்தில் இந்த இளம்பிஞ்சுகளின் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக