சனி, 30 ஆகஸ்ட், 2014

வவுனியா திருநாவற்குளத்தில் மாணவர்கள் கௌரவிப்பு!! (படங்கள் இணைப்பு)

வவுனியா திருநாவற்குள கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டிலும் திரு.தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பில்  2013 கா.பொ.த (சா.த) பரீட்சையில் சித்தியடைந்த திருநாவற்குள வாழ் மாணவர்களுக்கு இன்றைய தினம் (30.08) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் திருநாவற்குள பொது நோக்கு மண்டபத்தில் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் பாலேந்திரன் தலைமையில் கௌரவிப்பு விழா நடைபெற்றது.

இந் நிகழ்வில் திரு.தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பில் சிறுவர் விளையாட்டு பூங்காவும் 2013 ம் ஆண்டில் மெய்வல்லுனர் போட்டிகளில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவி செல்வி.லேக்காயினிக்கு கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி.அன்ரன் சோமராஜா அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கிராம சேவையாளர் திரு.கோணேஸ்வரலிங்கம், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.தேன்மொழி மகேஸ்வரன், பிரமண்டு வித்தியாலய அதிபர் திருமதி.திருவருள்நேசன், உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.திருவருள் நேசன், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் வன்னி மாவட்ட இணைப்பாளர்  திரு.சிவநேசன், வவுனியா நகரசபையின் முன்னைநாள் உப நகரபிதா திரு.க.சந்திரகுலசிங்கம், ஆசிரியர் திரு.சதீஸ்குமார், சமூக ஆர்வலர் திரு.பரமேஸ்வரன், மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி.நகுலேஸ்வரம்பிள்ளை அவர்களும் கலந்து கொண்டார்கள்.

இந் நிகழ்வில் உரையாற்றிய சிறப்பு விருந்தினர் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி.அன்ரன் சோமராஜா: மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இந்த கௌரவிப்பு விழா ஒரு உந்துகோலாக இருக்கும் எனவும்,  தொடர்ந்து மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் சிறந்து விளங்க வேண்டும் எனவும் கூறினார்.

தொடர்ந்து உரை நிகழ்த்திய கிராம சேவையாளர் திரு.கோணேஸ்வரலிங்கம் : மாணவர்களின் கல்வி பெறுபேறுகள் அண்மைக்காலங்களில்  உயர்ந்துள்ளதாகவும்  தொடர்ந்தும் எமது தமிழ் சமூகம் கல்வித்துறையில் சாதனை படைக்க வேண்டும் எனவும் கூறினார்.

தொடர்ந்து உரை நிகழ்த்திய தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் வன்னி மாவட்ட இணைப்பாளர்  திரு.சிவநேசன் : சமூக ஆர்வலர் திரு.தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் பல சமூக நல த்திட்டங்களை முன்னெடுத்து  வருகின்றார்  எனவும், அவர் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வருகின்றார் எனவும் குறிப்பிட்டார்.

''பூர்வீகம் செய்திகளுக்காக லிங்கம்''

















































 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக