திங்கள், 18 ஆகஸ்ட், 2014

பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்ட இலங்கையர் குறித்து மலேசியாவிடம் தரவு கோருகிறது இந்தியா!

தென்னிந்தியாவில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டார் என்று சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர் குறித்து ஆதாரங்களைத் தருமாறு இந்தியா, மலேசிய அதிகாரிகளைக் கோரியுள்ளது. இலங்கையரான முகமது சுலைமான் என்ற நபர் தொடர்பாக இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பே மலேசியாவிடம் இந்த விவரங்களைக் கோரியுள்ளது என்று தெரிவிக்கப்டுகிறது. அத்துடன் குறிப்பிட்ட புலனாய்வுப் பிரிவை சேர்ந்த மூத்த அதிகாரிகள் சமீபத்தில்
மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபட்டனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 தென்னிந்தியாவில் உள்ள தூதரகங்களைத் தாக்குவதற்கு இலங்கையில் திட்டமிடப்பட்டதாக மலேசியா அளித்த புலனாய்வு தகவல்களின் பின்னரே இந்திய அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட சதித்திட்டம் குறித்து தெரியவந்தது. அதனையடுத்து இலங்கையரான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. தாக்குதலை மேற்கொள்ளவிருந்த தற்கொலைக் குண்டுதாரிகள் மாலைதீவிலிருந்தே கேரளா செல்லவிருந்தனர் என்றும், அதன்பொருட்டு மாலைதீவிலும் விசாரணைகள் இடம்பெறலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட சுலைமான், தான் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியின் ஆலோசனையின் பெயரிலேயே இந்த சதித்திட்டத்தை தீட்டினார் என்று தெரிவித்திருந்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக