வியாழன், 14 ஆகஸ்ட், 2014

உயர்தரப் பரீட்சை மாணவி பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது பாம்பு தீண்டியது!!


ஹொரண என்ற இடத்தில் உள்ள பரீட்சை நிலையத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை பாம்பு தீண்டியது.
எனினும் அதனை பொருட்படுத்தாது பரீட்சையை தொடருமாறு பரீட்சை மேற்பார்வையாளர்கள் மாணவியை வலியுறுத்தியதாக மாணவியின் தந்தை முறையிட்டுள்ளார்.

பாம்பு தீண்டிய இந்த சம்பவம் கடந்த 5ம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.

மூன்றாம் தடவையாக கடந்த 5ம் திகதியன்று உயிரியல் பரீட்சைக்கு
தோற்றிய தனுஜா விமல்கா விமலசேன என்ற மாணவி, பிற்பகல் 2 மணியளவில் தமது கால் பெருவிரலில் ஏதோ பலமாக கடித்ததை உணர்ந்துள்ளார்.

இதனையடுத்து அவரின் பெருவிரலில் இருந்து இரத்தம் சொரிந்த போதும் அதனை பொருட்படுத்தாது மேற்பார்வையாளரான ஆசிரியை ஒருவர் மாணவியை பரீட்சையை தொடர்ந்தும் எழுதுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது கேள்விகளை பார்க்காமலேயே தாம் விடைகளை எழுதியதாக மாணவி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பரீட்சை நிலைய உயரதிகாரி, தமது அறிக்கையில் மாணவியின் காலில் பாம்பு கடித்தமை பரீட்சை மண்டபத்தில் வைத்து இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது, தமது மகளுக்கு பாரிய மனப்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள மாணவியின் தந்தை தமது மகளுக்கு நிவாரணம் தரப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக