திங்கள், 9 ஜூன், 2014

போர்க் குற்ற விசாரணைகள் குறித்து நாடாளுமன்றில் கருத்து கோரப்பட உள்ளது...!!

போர்க் குற்ற விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து கோரப்பட உள்ளதாக அரசாஙகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனிதாபிமான மீட்புப் பணிகளின் போது போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து,  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது நியாயமானதா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரப்படவுள்ளது.

போர்க் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை நடாத்த உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இந்த விசாரணைக்குழுவினை நாளை பெயரிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


விசாரணைக்குழு அமைப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக