வெள்ளி, 25 ஜூலை, 2014

அமைச்சர் சம்பிக்கவின் 'பேஸ்புக்' முடக்கம்!!

முகப்புப் புத்தக (facebook) நிர்வாகத்தினர் எவ்வித முன்னறிவித்தலுமின்றி தனது முகப்புப் புத்தகப் பக்கத்தைச் செயலிழக்கச் செய்துள்ளனர் என தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் முகப்புப் புத்தக நிர்வாகத்துடன் தான் மின்னஞ்சல் (E - mail) மூலம் தொடர்பு கொண்டதாகவும் அப்பக்கம் முடக்கப்பட்டதற்கான காரணத்தை அவர்கள் தனக்கு ஓரிரு நாட்களில் தெரிவிப்பதாக
பதிலளித்துள்ளனர் எனவும் அமைச்சர் சம்பிக்க கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- "எனது உத்தியோகபூர்வ முகப்புப் புத்தகத்தில் சுமார் 21 ஆயிரம் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னுடன் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். எனினும், சமூக வலைத்தளத்தில் எனது பெயருக்குச் சமனான பெயரில் உருவாக்கப்பட்டுள்ள பக்கங்களில் எனது புகைப்படத்தை வெளியிட்டு என்னைப் பற்றித் தவறான தகவல்களை ஒருசில விஷமிகள் வெளியிட்டு வருகிறார்கள்.

இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் என்னைப் பற்றி தவறான அபிப்பிராயங்கள் பரப்பப்படுகின்றன. எனது உத்தியோகபூர்வ முகப்புப் புத்தகப் பக்கத்தில் நான் எந்தவொரு மதத்தையோ அல்லது கலாசாரத்தையோ நிந்திக்கும் வகையில் செய்திகளை வெளியிடுவதில்லை. எனது பக்கம் இவ்வாறு செயலிழக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சில வி­ஷமிகள் செயற்பட்டுள்ளார்கள் என நம்புகிறேன்" என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக