செவ்வாய், 10 ஜூன், 2014

ஜப்பான் மீண்டும் திமிங்கில வேட்டைக்கு திட்டம்...!!!

அண்டார்டிக் கடலில் தமது வரு டாந்த திமிங்கில வேட்டையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற் சிகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜப்பான் பிரதமர் ன்ஸோ அபே கூறியுள்ளார்.

1986ஆம் ஆண்டில் திமிங்கில வேட்டைக்கு உலக அளவில் கொண்டு வரப்பட்ட தடையையும் தாண்டி ஜப் பான் அதன் நடவடிக்கையை தொடர்ந் தும் முன்னெடுத்துவந்தது.

விஞ்ஞான ஆய்வுகளுக்காக மட்டும் திமிங்கில வேட்டையை அனுமதிக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே ஜப்பான் அதனை முன்னெடுத்து வந்தது.

ஆனால், ஜப்பானின் நடவடிக்கை உண்மையில் விஞ்ஞான ஆய்வுகளுக் கானது அல்லவென்று கூறிய சர்வதேச நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருந்த நிலையில், திமிங்கில வேட்டை இந்த ஆண்டில் கைவிடப்பட்டது.



விஞ்ஞான ஆய்வு என்ற பெயரில் வணிக நோக்கத்துடனேயே ஜப்பான் திமிங்கில வேட்டையை நடத்தி வந்திருப்பதை நீதிமன்றம் கண்டறிந்தது.

இதனிடையே, திமிங்கில வேட்டை என்பது ஜப்பானிய மக்களின் கலாசார அங்கம் என்பதை சர்வதேச சமூகத்திற்குப் புரியவைக்க தான் முயற்சிப்பதாக பிரதமர் அபே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக