இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்கள் 78 பேரையும் விடுதலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டுவிட்டர் மூலமாகத் தெரிவித்திருக்கிறார். இந்திய அரசினால் 13 இலங்கை மீனவர்கள் இன்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள அவர், இந்திய பாதுகாப்பில் உள்ள ஏனைய இலங்கை மீனவர்களும் விரைவில் விடுதலை
செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கிறார் என அவர் தமது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.
நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 82 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த மீனவர்களை விடுதலை செய்வது பற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் டுவிட்டர் மூலமான அறிவித்தல் வெளியாகியிருக்கிறது. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தபோது, நெடுந்தீவு கடற்பரப்பில் 32 மீனவர்ளும், தலைமன்னார் கடற்பரப்பில் 46 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும்.
ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் மாவட்ட நீதிமன்றங்களில் இன்று முற்படுத்தப்பட்டனர். நெடுந்தீவில் கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிபதியும், தலைமன்னாரில் கைது செய்யப்பட்டவர்களை வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மன்னார் நீதிபதியும் உத்தரவிட்டிருந்தனர் என்பது தெரிந்ததே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக