செவ்வாய், 10 ஜூன், 2014

சீனா வழங்கிய கணனிகள் தேர்ஸ்டன் கல்லூரிக்கு அன்பளிப்பு....!!!!

சீன அரசாங்கத்தினால் தமக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 100 கணனிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரிக்கு நேற்று அன்பளிப்பாக வழங்கினார்.

சீன கமியூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவையொட்டிய ஞாபகார்த்தமாக ஜனாதிபதிக்கு இக் கணணிகள் வழங்கப்பட்டன. அதனை ஜனாதிபதியவர்கள் தான் கற்ற பாடசாலையான தேர்ஸ்டன் கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

நேற்றைய தினம் கொழும்பு தேர்ஸ்டன் கல்லுரிக்கு வருகை தந்த ஜனாதிபதியவர்கள் கொழும்பு தேர்ஸ்டன் கல்லுரியில் புதிய கணனி ஆய்வு கூடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துடன் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள

பாடசாலைக்கான மூன்று மாடிக்கட்டிடத்தையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.


அமைச்சர் பந்துல குணவர்தன, இலங்கைக்கான சீன பிரதி உயர்ஸ்தானிகர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தேர்ஸ்டன் கல்லுரியின் பழைய மாணவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றைய தினம் கல்லூரிக்கு வருகை தந்த போது கல்லூரி அதிபர், பிரதியதிபர்கள், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அனைவரும் மகத்தான வரவேற்பளித்தனர்.

சமயகலாசார அம்சங்களுடன் ஜனாதிபதியவர்கள் கல்லூரி மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

கல்லூரியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அதிபர் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியின் பழைய மாணவர்களுடனும் கலந்துரையாடினார். நிகழ்வின் இறுதியில் கல்லூரி அதிபர், பிரதியதிபர்கள். இணைந்து ஜனாதிபதி அவர்களுக்கு ஞாபகார்த்த விருதொன்றை வழங்கி கெளரவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக