திங்கள், 9 ஜூன், 2014

நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் சட்டநடவடிக்கைக்கு தயாராக வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு.....!!!

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் படையினரின் தேவைகளுக்காக மக்களுடைய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதனை எதிர்த்து மக்கள் நீதிமன்றங்களை நாடுவதற்கு முயற்சிக்க வேண்டும் என தெரிவித்திருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, சட்ட உதவிகள் உள்ளிட்ட உதவிகளை தாம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கின்றது.
யாழ்ப்பாணம் அளவெட்டிää நுணாவில்ää திக்கம் பகுதிகளில் மக்களுடைய நிலங்கள் சுவீகரிக்கப்படவுள்ளதாக நிலத்திற்குள் சொந்தமான மக்களுக்கு பிரிவு 2 கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடுமையான எதிர்ப்பினால் குறித்த நிலங்களை அளக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசாங்க முக்கியஸ்தர்கள் மற்றும் படையினர் மேற்குறித்த நிலங்களை படையினரின் தேவைகளுக்காக சுவீகரித்தே தீருவோம் என்ற நிலைப்பாட்டை மீண்டும் கூறியிருக்கின்றனர்
.

எனவே சட்டரீதியாக இந்தப் பிரச்சிiனைய கையாள வேண்டிய தேவை எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

வலிகாமம் வடக்கில் மக்களுடைய 6ஆயிரம் ஏக்கர் நிலத்தை சுவீகரிக்கப் போவதாக இதேபோன்று பிரிவு 2 பிரசுரம் ஒட்டப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னரும், அதற்கு முன்னரும் மக்கள் மேற்படி சுவீகரிப்பினை எதிர்த்து நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், காணி சுவீகரிப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதுடன், நீதிமன்றின் தீர்ப்பு வெளியாகும் வரையில் நிலத்தை சுவீகரிக்க முடியாத நிலை தொடர்ந்து வருகின்றது.

எனவே மேற்படி 3கிராமங் களிலும் உள்ள நிலத்திற்குச் சொந்தமான மக்கள் தங்களுடைய நிலம் சுவீகரிக்கப்படுவதை எதிர்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவேண்டும்.

மேலும் இவ்வாறான சுவீகரிப்பு நடவடிக்கைகள் சட்டரீதியாக மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக ஒரு நிலத்தை பொது தேவைக்காக சுவீகரிப்பதாயின் அதற்கு நிலத்தின் உரிமையாளரிகளின் அனுமதி பெறப்படவேண்டும், குறித்த பொதுத்தேவை தொடர்பாக அந்தப் பிரதேசத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் பேசவேண்டும்.

ஆனால் அவ்வாறன நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமல், பொதுத்தேவைகளுக்கென்ற போர்வையில் படையினரின் தேவைகளுக்காக பொதுதேவை என்ற அடையாளத்துடன் மக்களுடைய நிலத்தை சுவீகரிக்க முயற்சித்தார்கள். தற்போது படையினரின் தேவைகளுக்கென நேரடியாகவே சுவீகரிக்க முயற்சிக்கின்றார்கள்.

இவ்வாறான சுவீகரிப்பு தெற்கில் நடைபெற்றதாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. தற்போதும் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் கூட மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் தமிழர் தாயகத்தில் அது முற்றிலும் மாறாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

எனவே மக்கள் அச்சம் தவிர்து நீதிமன்றங்களை நாடி இந்தப் பிரச்சினையை சட்டரீதியாக அணுக வேண்டும். அதற்காக பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்படலாம். அதற்காக பின்வாங்க முடியாதென்பதுடன். சட்டரீதியாக அணுகும் போது அச்சுறுத்தப்படுதல் நடைபெற்றால் அதற்காகவும் நாம் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆகவே மக்கள் சட்டநடவடிக்கைக்கு மக்கள் தயாராக வேண்டும். சட்ட உதவிகள் மற்றும் வேறு உதவிகள் தேவையாயின் அதற்கான ஒத்துழைப்புக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய சட்டத்தரணிகள் ஊடாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாம் எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக