வியாழன், 19 ஜூன், 2014

சர்வதேச சமூகத்தை வெறுமனே விமர்சனம் செய்வதில் பயனில்லை விஜயதாச ராஜபக்ச...!!!

சர்வதேச சமூகத்தை வெறுமனே விமர்சனம் செய்வதில் பயனில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போர் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும் சர்வதேச சமூகத்தை வெற்றிகொள்ள அரசாங்கம் தவறியுள்ளது.

ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பொறுப்புணர்ச்சியற்ற வகையில் சர்வதேசத்தை விமர்சனம் செய்கின்றனர்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை.

தாருஸ்மன் அறிக்கை குறித்து திருப்தி அடைய முடியாது. அரசாங்கத்திற்கு எதிராக 5 குற்றச்சாட்டுக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 6 குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.



வெளிவிவகார சேவை பலவீனமடைந்துள்ளது.  வெளிவிவகார சேவையில் உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா விசாரணைக்குழுவினை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற தீர்மானத்தை பிரதமரோ, வெளிவிவகார அமைச்சரோ ஏன் கொண்டு வராமல், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்?

போரின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்த போதிலும்,  நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் எதுவும் செய்யவில்லை.

அரசாங்கம் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றது.

எதிர்கால தேர்தல்களின் போது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக