புதன், 18 ஜூன், 2014

வதந்திகளை பரப்புவோரை கைது செய்ய சிவில் உடைப் பொலிஸார் கடமையில்....!!!!

வதந்திகளை பரப்புவோரை கைது செய்ய பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு குறுஞ்செய்தி ஊடாகவும், தொடாலைபேசி ஊடாகவும் சிலர் வதந்திகளை பரப்பி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் தரப்பினரை கைது செய்ய சிவில் உடையணிந்த சில பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பஸ்கள்,  ரயில்கள் மற்றும் பொது இடங்களில் வதந்திகளை பரப்பும் வகையில் பேச வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக