புதன், 18 ஜூன், 2014

ஐ.நாவின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல....!!!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமையவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தற்போதைய நடவடிக்கைகளை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. மேற்குலக நாடுகளின் கண்களினால் உலகைப் பார்க்கும் ஓர் அமைப்பில் எமக்குப் பயனில்லை.

போரின் பின்னர் அனைத்து இன சமூகங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

ராஜபக்சவை கட்டியணைத்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீது தாக்குதல் நடத்த சிலரும்,  ஐக்கிய நாடுகள் அமைப்பினை கட்டியணைத்து ராஜபக்ச மீது தாக்குதல் நடத்த சிலரும் முயற்சிக்கின்றனர்.   இவை இரண்டுமே தவறான அணுகுமுறைகள்.

சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  இவை தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதில்லை.


இராஜதந்திர ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் நிலையில்,  வெளியுறவுச் சேவையில் திறமையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

எமது திருத்த யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால்,  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை தொடர்பில் நாடாளுமன்றில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள தீர்மானத்திற்கு முழு அளவில் ஆதரவளிப்போம் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக