வெள்ளி, 20 ஜூன், 2014

வவுனியாவில் காவல்துறையினரின் தடையை மீறியும், கவனயீர்ப்பு போராட்டம்.!!(படங்கள் இணைப்பு)

(ஓவியன்) இன்று (20/06) மதியம் 12.30 மணிக்கு, வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு முன்னால் அளுத்கம தாக்குதல்களை கண்டித்து சமூக நீதிக்கான வெகுஜென அமைப்பால் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.


வவுனியாவில் காவல்துறையினரின் தடையை மீறியும், கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைவரும் ஒரு நாட்டவரே, அவர்களின் உரிமைகளை பறிக்காதே, பொது பல சேனாவை தடை செய், இனவெறித்தாக்குதல்களை நிறுத்து, முஸ்லிம்களை தாக்காதே போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாடத்தில் கலந்துகொண்டோர் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர் .எனினும் பொலிசாரின் தலையீட்டால் கவனயீர்ப்பு போராட்டம் கலைக்கப்பட்டது.
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக