வியாழன், 26 ஜூன், 2014

பாகிஸ்தான் விமானம் மீதான தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்...!!!!

பாகிஸ்தானின் பேஷ்வாரில் உள்ள பாசா கான் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

விமான நிலையத்திலிருந்த விமானம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இரண்டு விமான சிற்பந்திகள் காயமடைந்துள்ளனர்.

மிருகத் தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கை அறிவித்துள்ளது.

தீவிரவாதிகள் குறித்த விமானத்தின் மீது நேற்று துப்பாக்கிச் சூடு
நடத்தியுள்ளனர்.

இந்த விமானத்தில் 178 பயணிகள் இருந்ததாகவும், சவூதி அரேபியா நோக்கிப் பயணம் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக