வெள்ளி, 20 ஜூன், 2014

இன மோதல்களில் ஈடுபடுவது காட்டுமிராண்டித்தனம்...!!!

இனங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், இன மோதல்களில் ஈடுபடுவது காட்டுமிராண்டித்தனமான செயல் என உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸா நாயக்க தெரிவித்தார்.

நாட்டில் அனைத்து பகுதிகளிலும் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இன முறுகல் ஏற்படும் இடங்களில் எல்லாம் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும்.ஒரு சிறு சம்பவத்தை காரணம்காட்டி நாடு முழுவதும் பரவச் செய்வது மிகவும் மோசமான செயல்.

ஒவ்வொரு குடிமகனும், அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் பொறுமைகாக்க வேண்டும். அப்பாவி மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடுவது என்பது காட்டுமிராண்டித்தனமான செயல். இவ்வாறான செயல்களில் ஒருவரும் ஈடுபடக் கூடாது.



நடந்து முடிந்துள்ள சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். இனங்களுக்கு இடையே மீண்டும் புரிந்துணர்வை ஏற்படுத்த இருசாராரும் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கா தெரிவித்தார்.

உயர் கல்வி அமைச்சில் நேற்று அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்காவை தினகரன் ஊடகவியலாளர் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக