வியாழன், 19 ஜூன், 2014

இலங்கை தொடர்பில் நேரில் ஆராய இன்று வருகிறார் ஐ.நாவின் உயர் அதிகாரி!!

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் விசாரணைக்கு எதிராக இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் நேரில் விடயங்களை ஆராய ஐ.நாவின் உயர் அதிகாரி ஒருவர் இன்று வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி பொதுச் செயலர் ஒஸ்கர் பெர்னாண்ட்ஸ் தராங்கோ (Oscar Fernandez-Taranco) வே இன்று இலங்கை வருகிறார். இந்த விஜயத்தின் போது நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் இக்காலப்பகுதியில் அரசாங்கத்தின்
முக்கியஸ்தர்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஐந.நாவின் விசாரணைக்குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றில் பிரேரணை நிறைவுற்றப்பட்டுள்ள சூழலிலேயே பெர்னாண்ட்ஸ் தராங்கோவின் விஜயம் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக