செவ்வாய், 10 ஜூன், 2014

சட்டக்கல்லூரி அனுமதிப் பரீட்சை மும்மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் அமைச்சர் வாசுதேவ.....!!!!

சட்டக்கல்லூரி அனுமதிப் பரீட்சையை ஆங்கில மொழியில் மட்டும் நடத்தக் கூடாது, மும்மொழிகளிலும் நடத்தப்படல் வேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சா வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஆங்கில மொழி மூலம் மட்டும் சட்டக்கல்லூரி அனுமதிப் பரீட்சை நடாத்துவது தேசிய மொழிக் கொள்கைகளுக்கு புறம்பானது.

சிங்கள,  தமிழ்,  ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில்  பரீட்சை நடாத்தப்பட வேண்டும். இது தொடர்பில் அமைச்சரவையை தெளிவுபடுத்த வேண்டும்.

எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டங்களின் போது சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சை குறித்து விரிவாகப் பேசப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக