சனி, 7 ஜூன், 2014

அரைக்கம்பத்தில் தேசியக் கொடி; கல்முனைப் பாடசாலையில்!!

கல்முனை வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வின்போது தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கல்முனையிலுள்ள பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதன்போது நிகழ்வுக்கு வருகை தந்திருந்த பிரதம அதிதி,
தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். இதன்போது கம்பத்தின் அரைவாசிவரை கொடி ஏறியது.

அதற்கு மேல் செல்ல கொடி மறுத்துவிட்டது. இதனால் அரைக் கம்பத்தில் தேசியக் கொடி பறந்த நிலையிலேயே தேசியக் கீதமும் இசைக்கப்பட்டது. தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறந்ததால் பாடசாலைக் கொடியையும் அரைக்கம்பத்திலேயே பறக்கவிடவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆரம்ப நிகழ்வுகள் வரை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள் பின்னர் மீள இறக்கப்பட்டு சீர் செய்யப்பட்டு ஏற்றப்பட்டன. இதனால் வைபவத்தில் கலந்துகொண்டவகள் தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக