புதன், 11 ஜூன், 2014

சந்திரிக்கா குறித்த புலனாய்வு அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைப்பு.....!!!!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பற்றிய புலனாய்வு அறிக்கையொன்று ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சந்திரிக்காவுடன் தொடர்புகளைப் பேணி வரும் ஆளும் கட்சி அமைச்சாகள் தொடர்பில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்காவை களமிறக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆளும் கட்சியிடம் அறிவிக்காது இரகசியமாக சந்திரிக்காவை சந்தித்த அமைச்சர்கள் பற்றிய புலனாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


முன்னாள் ஜனாதிபதியின் உறவினரான ஓர் சிரேஸ்ட அமைச்சர் இரகசியமான முறையில் ஹொரகொல்லவில் அமைந்துள்ள சந்திரிக்காவின் வீட்டில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்திரிக்கா தேர்தலில் போட்டியிட்டால் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக சில அமைச்சர்கள் வாக்குறுதி அளித்துள்ளதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக