ஞாயிறு, 1 ஜூன், 2014

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!!


தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 33 பேரையும் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

இராமேஸ்வரத்தில் இருந்து 7 படகுகளில் வந்த 33 மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த போது கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று
ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களையே கடற்படையினர் மன்னார் மாவட்டக் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக