யாழ்.பருத்தித்துறை விநாயகர் முதலியார் வீதி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டதென சந்தேகிக்கப்படும் பதுங்கு குழி ஒன்றினை படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினடிப்படையில் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பருத்தித்துறை பொலிஸாருக்கு நேற்றைய தினம் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினையடுத்து குறித்த பகுதியில் உள்ள வீட்டின் சமையலறை பகுதியிலிருந்து 8அடி ஆழமும், 6அடி அகலமும் கொண்ட குறித்த
பதுங்கு குழியினைப் படையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும் குறித்த வீட்டில் 1995ம் ஆண்டுக்கு முன்னைய காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் தங்கியிருந்த நிலையில் குறித்த பதுக்கு குழி அவர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
எனினும் பதுங்கு குழியினுள் ஆயுதங்களோ எந்தவொரு பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதேவேளை குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது வெளிநாட்டில் இருக்கும் நிலையில் வேறொரு குடும்பம் அந்த வீட்டில் வாடகைக்கு தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக